கோவை, ஆக. 20- நீட் தேர்வு பயத்தினால் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவை யில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
கோவை ஆர்.எஸ்.புரம் வெங்கட சாமி சாலை கிழக்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரு பவர் ரவிச்சந்திரன். இவரது 19வயது மகள் சுபசிறீ, கடந்த இரண்டு வருடமாக நீட் தேர் வுக்காக தனியார் அகாடமி யில் பயின்று வந்தார். கடந்த முறை தேர்வில் தோல்விய டைந்த நிலையில் இந்த வரு டம் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என தொடர்ந்து படித்து வந்துள்ளார். இந் நிலையில் கரோனா ஊரடங் கினால் ஒத்திவைக்கப்பட்ட நீட் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என அறி விப்பு வெளியானது. இதனால் தேர்வு நடந்தால் வெற்றி பெறுவோமாஎன சுபசிறீ பெரும்மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார்.
இதைத்தொடர்ந்து செவ் வாயன்று மாலை அவரது வீட்டில் தூக்கிட்டு தற் கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சுபசிறீயின் தாயார் சுமதி அளித்த தகவ லின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.எஸ்.புரம் காவல் துறையினர் உடலைக் கைப் பற்றி உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். மேலும் மாணவி தற் கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment