ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 7, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:



  • உள்ளூர் தொழிலாளர்களுக்கு 80 சதவீதப் பணிகளை அளித்திட தெலுங்கானா அமைச்சரவை முடிவு செய்துள்ளது.


இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லி:



  • மத்திய அரசின் பாதுகாப்புத்துறை இணைய தளத்தில் சீனா இந்திய லடாக் எல்லைக்குள் ஊடுருவியதைக் குறிப்பிட்ட செய்திகள், பின்னர் நீக்கப்பட்டுள்ளன. இது குறித்து, பிரதமர் மோடி பொய்யுரைத்துள்ளார் என காங் கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.


நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:



  • ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் பதவியில் இருந்து ராஜி னாமா செய்த முர்மு, உடன், மத்திய அரசின் தணிக்கைத் துறை ஆடிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.


தி இந்து:



  • கரோனா தொற்று பயத்தைப் பயன்படுத்தி, மக்களிடையே தனது மருந்துப் பொருட்களை விற்க முனைந்த பதஞ்சலி நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் ரூ.10 லட்சம் அபரா தம் விதித்துள்ளது. இந்த அபராதத் தொகையை அடையார் புற்று நோய் மருத்துவ மனைக்கும், அரசின் யோகா மற்றும் இயற்கை மருத்துவ மனைக்கும் தர உத்தரவிட்டுள்ளது.


டைம்ஸ் ஆப் இந்தியா:



  • இ-பாஸ் முறையைத் தமிழக அரசு முற்றிலும் கைவிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை வற்புறுத்தியுள்ளார்.


- குடந்தை கருணா


7.8.2020


No comments:

Post a Comment