டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:
- மதச்சார்பின்மைக் கொள்கையில் காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்திக் கொள்ளவில்லை என்றால், அயோத்தியில் எழும் பஜனைக் குரல், அக்கட்சிக்கு இரங்கற்பா படிப்பதாகி விடும் என தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
- அயோத்தியில் ராமன் கோயில் பூமி பூஜையில் பிரதமர் கலந்து கொள்வது, பா.ஜ.க.விற்கு வரும் தேர்தல் அரசியலுக்குப் பயன்படும் என நினைக்கிறார்கள் என பர்சா வெங்கடேஸ்வர ராவ் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
டெக்கான் கிரானிகல், சென்னைப் பதிப்பு:
- அண்ணா தி.மு.க. கொடியில் இருந்து அண்ணாவின் படத்தை எடுத்துவிட வேண்டும் என காமெடி நடிகர் எஸ்.வி. சேகர் விமர்சனத்திற்கு, அக்கட்சியில் நின்று எம்.எல்.ஏ. ஆன காலத்தில் வாங்கிய சம்பளத்தைத் திருப்பித் தந்து விட்டு காமெடி நடிகர் பேசட்டும் என தமிழக அமைச்சர் ஜெயக்குமார் காட்ட மாக பதில் அளித்துள்ளார்.
- ஊடகங்கள் பெரும்பான்மைவாதத்தை எதிரொலிக்கும் கருவிகளாக மாறிவிட்டன என மூத்த எழுத்தாளர் ஆகார் படேல் தனது கட்டுரையில் கூறியுள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லி:
- அயோத்தி ராமன் கோயில் பூஜையில் பிரதமர் கலந்து கொண்டது, பாபர் மசூதி இடிக்கப்பட்டதை நியாயப்படுத்துவது போல் உள்ளது என சி.பி.எம். பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.
- அரசு ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை நிருபிக்கும் செயல் இது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
- இந்திய சுதந்திரப் போராட்டத்தோடு, ராமன் கோயில் நிகழ்வை பிரதமர் ஒப்பிடுவது மதச்சார்பின்மைக் கோட்பாட் டுக்கு எதிரானது என மாநிலங்களவை உறுப்பினர் பினாய் விஸ்வம் கூறியுள்ளார்.
- உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர்க்கான மத்திய அரசின் 10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்துத் தொடரப் பட்ட வழக்கை, அய்ந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வுக்கு மாற்றி, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
தேசியச் சுற்றுச்சூழல் பாதிப்பு திருத்த அறிவிக்கையை (EIA) மத்திய அரசு வெளியிட கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
- குடந்தை கருணா
6.8.2020
No comments:
Post a Comment