நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரஷாந்த் பூஷண் குற்றவாளி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 14, 2020

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரஷாந்த் பூஷண் குற்றவாளி

உச்சநீதிமன்றம் தீர்ப்பு


புதுடில்லி, ஆக.14 உச்சநீதிமன்றம் மற்றும் அதன் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்திருந்ததாக பிரபல வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் மீது பதியப்பட்டிருந்த வழக்கில், அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.


உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பிஆர் கவாய், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய 3 பேர் கொண்ட நீதிமன்ற அமர்வு பிரசாந்த் பூஷணுக்கு எதிரான வழக்கை விசாரித்தது. பிராசாந்த் பூஷண் மீது சுமத்தப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளிதான் என்று இன்று காலை தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், வரும் 20ஆம் தேதி தண்டனை விவரம் குறித்து தெரிவிப்பதாகக் கூறியுள்ளது.


No comments:

Post a Comment