மேல்நிலைக்கல்வி மாணவர் சேர்க்கை: பாடப்பிரிவு வாரியாக இடஒதுக்கீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 14, 2020

மேல்நிலைக்கல்வி மாணவர் சேர்க்கை: பாடப்பிரிவு வாரியாக இடஒதுக்கீடு

பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு



சென்னை, ஆக.14, மேல்நிலைப் பள்ளிகளில் பாடப்பிரிவு வாரியாக இடஒதுக்கீடு வழங்கப்பட்டு மாண வர் சேர்க்கை நடைபெற வேண்டும் என அனைத்துப் பள்ளிகளுக்கும் கல் வித்துறை உத்தரவு பிறப் பித்துள்ளது.


இதுதொடர்பாக, பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:-


மேல்நிலைப்பள்ளிகளில் மாண வர் சேர்க்கையின் போது, அவ்வப் போது நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு விதிகள் பாடப்பிரிவு வாரியாக கடைப்பிடிக்கப்பட வேண் டும். 2020-_2021ஆம் கல்வியாண்டிலும் மேல்நிலை கல்விக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும்போது மாநி லத்தின் அதிகார வரம்புக்குள் செயல் படும் அனைத்து வகை பள்ளிகளிலும் (சிறுபான்மை கல்வி நிலையங்கள் நீங்கலாக) பழங்குடியினர், ஆதி திராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட் டோர் மாணவர்களுக்கு இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட வேண்டும்.


பொதுப்பிரிவுக்கு 31 சதவீதம், பழங்குடியினருக்கு 1 சதவீதம், ஆதி திராவிடருக்கு 18 சதவீதம், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மர பினருக்கு 20 சதவீதம், பிற்படுத்தப் பட்டோர் (முஸ்லிம்) 3.5 சதவீதம், பிற்படுத்தப்பட்டோர் 26.5 சதவீதம் என்ற விகிதத்தில் கடைப்பிடிக்க வேண்டும்.


மாணவர் சேர்க்கையின்போது பொதுப்பிரிவினருக்கான 31 சதவீதம் இடத்துக்கான பட்டியல் முதலில் தயாரிக்கப்பட வேண்டும். இதில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே முன்னு ரிமை வழங்கிடவும், பொதுப்பிரிவினர், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட பிரிவினர் என்ற எவ்வித பாகுபாடின்றி தயா ரித்திடவும் அறிவுறுத்தப்படுகிறது.


மாநிலத்தின் அதிகார வரம்புக்குள் செயல்படும் அனைத்து வகை பள்ளி களிலும் பாடப்பிரிவு வாரியாக மேற் சொன்ன விகிதத்தில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு மேல்நிலைக் கல்விக் கான மாணவர் சேர்க்கை நடை பெறுவதை உறுதிசெய்ய வேண்டும்.


இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.


No comments:

Post a Comment