புதிய கல்விக் கொள்கைகுறித்து அனைத்துக்கட்சித் தலைவர்களின் கருத்துகளையும் அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றுக - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 6, 2020

புதிய கல்விக் கொள்கைகுறித்து அனைத்துக்கட்சித் தலைவர்களின் கருத்துகளையும் அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றுக

தமிழக அரசுக்கு இரா.முத்தரசன் வலியுறுத்தல்



சென்னை, ஆக. 6- தமிழ்நாட்டில் கல்வி கற்பிப்பதில் இருமொழிக்கொள்கையே தொடரும், மும்மொழிக் கொள்கையை அனுமதிக்காது என தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் திட்டவட்டமாக அறிவித் திருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.


மத்திய அரசு அமலாக்கத் துடிக்கும் புதிய கல்விக்கொள்கையின் தீய விளை வுகளை எதிர்த்துக் குரல் கொடுத்த தமிழக மக்களின் உணர்களுக்கு மதிப்பளித்தும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் விடுத்த வேண்டு கோளை ஏற்றும் தமிழ்நாடு அரசு இரு மொழிக் கல்விக் கொள்கையே தொடரும் என அறிவித்திருப்பதை மத்திய அரசு உணர வேண்டும்.


மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சார்பில் முதலமைச்சருக்கு எழு தியுள்ள கடிதத்தில் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக கூறியுள்ள மற்ற கோரிக்கை களையும் தமிழ்நாடு அரசு ஏற்று, அமைச் சரவைக் கூட்டத்தில் தீர்மானங்களாக நிறைவேற்றி அரசின் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும் என முதலமைச்சரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு  வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.


இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.


No comments:

Post a Comment