மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் செயல்வீரரும், சிறந்த பகுத் தறிவு முற்போக்குச் சிந்தனையாளருமான தோழர் த.லட்சுமணன் அவர்கள் (வயது 84) நேற்று முன்தினம் காலமானார் என்பதை அறிந்து மிகவும் துயருறுகிறோம்.
நல்ல கொள்கையாளராக இருந்த தோழர் லட்சுமணன் அவர்கள் பழகுவதற்கு இனிய நண்பருமாவார். நமது கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் பணியாற்றிய துறையிலேயே அவரும் சம காலத்தவராக இருந்து பணியாற்றிய பிறகு, முழுநேர இயக்கப் பணியை செவ்வனே செய்த செம்மல்!
அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதுபோவே, நினைவில் வாழும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் தோழர்கள் உமாநாத் - பாப்பா உமாநாத் ஆகியோரின் மகள் உ.வாசுகி அவர்களின் வாழ்விணையர் தோழர் விசுவநாதன் அவர்கள் மறைவும் மிகவும் துயரமான செய்தியாகும். அவரைப் பிரிந்து வாடும் அவரது வாழ்விணையர் தோழர் உ.வாசுகி அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும், கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
- கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
26.8.2020
No comments:
Post a Comment