திருவள்ளூர் மாவட்டம் இரா.கி.பேட்டை பெரியார் பெருந்தொண்டர் பு.வெ.முருகேசன் (வயது 81) நேற்று (22.8.2020) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
- - - - -
மன்னார்குடி ஒன்றியம் உள்ளிக்கோட்டை கிளைக் கழகத் தலைவரும், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலருமான கே.இராஜேந்திரன் (வயது 68) மாரடைப்பு காரணமாக நேற்று (22.8.2020) சனிக் கிழமை மாலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். மறைந்த கே.ராஜேந்திரனுக்கு மனைவி செங்கொடி, மகன் ஜெகன், மகள் ஜனனி பாலகுமார் உள்ளனர். இன்று (23.8.2020) பகல் 12 மணிக்கு இறுதி ஊர்வலம் நடைபெற்று உள்ளிக்கோட்டை சமத்துவ மயானத்தில் அவரது உடல் எரியூட்டப்பட்டது.
மன்னார்குடி மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், மாவட்ட அமைப்பாளர் ஆர்.எஸ்.அன்பழகன், நகரத் தலைவர் மு.இராமதாசு, கழகப் பேச்சாளர் இராம.அன்பழகன், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் வை.கவுதமன், மன்னார்குடி சிவா. வணங்காமுடி, மகாதேவப்பட்டணம் கிளைத் தலைவர் எம்.எஸ். சேகர், மன்னை சித்து, ஒன்றிய அமைப்பாளர் ந.இன்பக்கடல் உள்ளிட்ட கழகத் தோழர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
No comments:
Post a Comment