சென்னை, ஆக. 23- போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்கப் புதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையராக தற்போது பொறுப்பேற்றுள்ள மகேஷ்குமார் புதியதாக அபராதம் விதிக்கும் முறையை அறிமுகப்படுத்தினார். வெளிநாடுகளில் இருப்பது போன்று ஒரு வாகனம் தடையை மீறி அதாவது போக்குவரத்து விதிகளை மீறி எங்காவது நிறுத்தப்பட்டு இருந்தால் அந்த இடத்தில் அந்த வாகனத்தில் அபராதம் விதிக்கும் அபராத ரசீதைப் போக்குவரத்துக் காவலர்கள் ஒட்டிவிட்டுச் சென்று விடுவார்கள்.
அதன் பிறகு அந்த வாகன உரிமையாளர் அந்த அபராதத்தொகையை டிஜிட்டல் மயமாகவோ, அஞ்சலகத்திலோ சென்று கட்டலாம் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது. இதனால் காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே ஏற்படும் பிரச் சினைகள் தவிர்க்கப்படும் எனவும், காவல்துறையினர் லஞ்சம் வாங்குவது தவிர்க் கப்படும் எனவும், அதே நேரத்தில் பொதுமக்க ளிடையே காவலர்கள் தவறாக நடக்க வழி இல்லை என்ற அடிப்படையிலும் இந்த புதிய அபராதம் விதிக்கும் முறையை சென்னை காவல்துறை அறிமுகப் படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment