பரிவு உணர்வுடன் பணியாற்றாத அய்.ஏ.எஸ். அதிகாரியை வேறு துறைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 25, 2020

பரிவு உணர்வுடன் பணியாற்றாத அய்.ஏ.எஸ். அதிகாரியை வேறு துறைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


சென்னை, ஆக.25 தமிழக அரசுப் பணியில் இருப்பவர் இறக்க நேரிடு கையில் அந்த அரசு ஊழியரின் குடும் பத்து வாரிசு ஒருவருக்கு அரசுப் பணி அளித்திட வேண்டும் எனும் நடை முறை அரசாணை உள்ளது. இந்த அரசாணையின்படி அரசுப் பணிக்கு விண்ணப்பித்த வேண்டு கோளை, 'விண்ணப்பம் தாமதமாகப் பெறப்பட் டது' எனக் காரணம் கூறி நிராகரித்த சென்னை மாநகராட் சியின் முன்னாள் ஆணையரை வேறு துறைக்கு பணியிட மாற்றம் செய்திட  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண் பமை நீதிபதி எஸ். வைத்தியநாதன் அது குறித்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு உத்தர விட் டுள்ளார்.


பரிவு அடிப்படையிலான (Compassionate  appointment) வேலைக்கு உரியவர் மூன்று முறை விண்ணப்பித்திருந்தும், கடைசி யாக விண்ணப்பித்த தேதியை மட்டும் கணக்கில் கொண்டு  அரசு ஊழியர் இறந்து  மூன்று மாதக் காலத்திற்குப் பின் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது என சரி பார்க்கப்படாத தகவலைக் கொண்டு மனு நிராகரிக்கப்பட் டுள்ளது. இது இயல்பாக நட வடிக்கை எடுக்கப்பட வேண்டிய அரசு நடைமுறையல்ல; வாழ்வதாரம் தொடர்பானது. இந்த ஆண்டு நவம்பர் மாத இறுதிக்குள் விண்ணப்பித்த நபருக்கு பரிவு அடிப்படையில்  அரசுப் பணி வழங்கிட வேண்டும்.  பணி அளிக்கப்படாத பட்சத்தில் 2020, செப்டம்பர் 1, முதல் பணியில் சேர்ந்தவராக விண்ணப்பதாரர் கருதப்படுவார். உரிய சம்பளமும் வழங்கப்பட வேண்டும் என கடுமையாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. மேலும் விண் ணப்பத்தை நிராகரித்த மாநகராட்சி முன்னாள் ஆணையரை பணியிட மாற்றம் செய்திடவும் உத்தர விடப்பட்டுள்ளது.


அரசு ஊழியர் தனது பணிக் காலத்தில்  இறக்க நேரிட்டால், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு 'பரிவு அடிப்படையில் அரசுப் பணி வழங்கிட வேண்டும்' எனும் அரசு விதிமுறையினை கருணை உணர்வுடன் பரிசீலிக்காத அய்.ஏ.எஸ். அதிகாரியை பணியிட மாற்றம் செய்திட  சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு இட்டது, அரசு அதிகாரிகள் தங்களது பொறுப்பினை உணர்ந்து கடமை ஆற்ற வேண்டும் என்பதை உறுதிப்படுத்திடும் வகையில் உள்ளது என பொது மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப் படுகிறது.


சென்னை உயர்நீதிமன்ற உத்தரவும்  பெரிதும் பாராட்டப்படுகிறது.


No comments:

Post a Comment