நினைவிருக்கிறதா?
தமிழ்நாட்டில் சுங்கச் சாவடிகள் 10 சதவிகிதம் வரை கட்டணம் உயர்வு.
தான் ஆட்சிக்கு வந்தால் சுங்கச்சாவடி அகற்றப்படும் என்று (2014) நரேந்திர மோடி கூறினாரே - நினைவிருக்கிறதா? இதையெல்லாம் யார் நினைவு வைத்துக் கொள்ளப் போகிறார்கள் என்று நினைத்திருக்கலாம்.
மகிழ்ச்சிதான்!
ஆதிச்சநல்லூர், கீழடி உள்ளிட்ட இடங்களில் நடக்கும் அகழாய்வுகளில் உள்ள முன்னேற்றம் குறித்த அறிக்கையை தமிழக முதலமைச்சர் வெளியிட்டார்.
ஆதிச்சநல்லூரில் 17 ஆண்டுகளாக வெளியிடப்படாத ஆய்வு அறிக்கை - இப்பொழுதுதாவது முன்னேற்றம் குறித்து அறிக்கை வெளி வருகிறதே - அதுவரை மகிழ்ச்சிதான்!
இன்னும் உயிர் இருக்கிறதா...?
தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளில் அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கை - முதலமைச்சர் அறிவிப்பு.
மகிழ்ச்சிதான்; இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு என்ன பயனோ! பிற மாநிலத்தவர்கள்தானே பலனை அனுபவிக்கப் போகிறார்கள்.
ஆமாம், 'நீட்' சம்பந்தமான தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாவுக்கு இன்னும் உயிர் இருக்கிறதா...?
காப்பாற்றவில்லையே!
‘வெற்றிவேல்', 'வீரவேல்' முழக்கத்துடன் தமிழக பா.ஜ.க. கூட்டம் நடைடெபற்றது.
பா.ஜ.க.வை மக்கள் காப்பாற்ற மாட்டார்கள் - கடவுள்கள்தான் காப்பாற்றவேண்டும் போலும். 1971 இல் ராமனும், 2019 இல் கிருஷ்ணனும் காப்பாற்றவில்லையே!
ஆட்சியை இழக்கும்
முதல் மாநிலம்....
முதல் மாநிலமாக கருநாடகாவில் புதிய கல்விக் கொள்கை அமலாகும்!
இந்தப் புதிய கல்விக் கொள்கை காரணமாக ஆட்சியை இழக்கும் முதல் மாநிலமாக கருநாடகம்தான் இருக்கப் போகிறது.
என்ன
நடவடிக்கை?
‘ஆன்லைன்' வகுப்பு விதிமுறைகளைப் பின்பற்றாத பள்ளிகள்மீது என்ன நடவடிக்கை? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.
94 சதவிகித மாணவர்கள் காணொலிமூலம் வகுப்புகளைக் கவனிக்க 'இண்டர்நெட்' வசதியில்லை என்று ஓர் ஆய்வு அறிக்கை கூறுகிறதே -ஏடுகளிலும் முக்கியமாக இந்தச் செய்தி வெளிவந்ததே - இதுகுறித்து என்ன நடவடிக்கை?
No comments:
Post a Comment