அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களது 142 ஆவது பிறந்த நாள் வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி வருவதை முன்னிட்டு, நாடெங்கும், நகரெங்கும், ஊரெங்கும், பட்டிதொட்டி களிலும் நாளை முதலே சுவர் எழுத்து மூலம் நமது அரும் பிரச்சாரப் பணியை உடனடியாகத் தொடங்க வேண்டுகிறோம்.
இன்றைய கரோனா சூழலில், சுவரெழுத்து நமக்கு நல்லதோர் பிரச்சாரத் தளம். அதனை எங்கும் செய்யுங்கள்! ஒவ்வொரு பொறுப்பாளரும் இதில் பங்கேற்று இதை ஒரு முக்கியக் கடமையாகக் கருதி பணிகளில் இறங்குங்கள்!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
15.8.2020
No comments:
Post a Comment