முகநூலிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 12, 2020

முகநூலிலிருந்து...

கிருஷ்ணஜெயந்தி பற்றி அறிஞர்கள் கூற்று!


கிருஷ்ணன் என்ற பெயரில் நான்கு பேர் இருக்கிறர்கள். ஒரு கிருஷ்ணன், சத்யவதியின் மகன். திரிதராஷ்டிரன், பாண்டு, விதுரன் ஆகியோரின் தந்தை.


இரண்டாவது கிருஷ்ணன், சுபத்ராவின் சகோதரன், அர்ஜுன னின் நண்பன்.


மூன்றாவது கிருஷ்ணன், வசுதேவர், தேவகி ஆகியோரின் மகன், மதுராவில் வசித்தவர்.


 நான்காவது கிருஷ்ணன் கோகுலத்தில் நந்தனாலும் யசோ தாவாலும் வளர்க்கப்படடவர்; இவர்தான் சிசுபாலனை கொன்றவர்.”


ஆதாரம் : அம்பேத்கர் நூல் தொகுப்பு -8


கீதையின் நாயகன் கிருஷ்ணனைப் பற்றி மட்டும் தற்போது பேசுவோம்.


பவுத்த சாம்ராஜ்யத்தில் அனைவரும் சுயமரியாதையுடன் வாழ்ந்தனர். பின் புஷ்யமித்திர சுங்கனால்  அசோகரின் பேரன் படு கொலை செய்யப்பட்டு, ஆரியரின் மனுதர்ம ஆட்சியில் அடிமை யாக்கப்படும்போது (குடும்பச் சூழ்நிலை காரணமாக பல நேரங்களில் அனுசரித்துச் செல்கிறோமே, அதைத் தவிர்க்க) அடிமையாகாமல் பலர் துறவறம் பூண்டனர் .


மனுதர்மத்தின்படி சூத்திரன் துறவறம் போகக்கூடாது, பம்பாய் நீதிமன்றம் அதை தீர்ப்பாகவும் வழங்கியுள்ளது.


நம்ம சொல்ல வர்ரது என்னான்னா  துறவறம் போகிறவர்களை தடுக்கவே கீதையில் சொல்லப்படுவதாக கூறிக்கொண்டு, பலனை எதிர்பாராதே கடமையை செய் எனும் சித்தாந்தத்தைப் பரப்பினர். அதாவது பலனை எதிர்பாராமல் பார்ப்பானுக்கு அடிமை வேலை செய் என்பதே இதன் பொருள். (எல்லோரும் துறவறம் போய்ட்டா பார்ப்பான் ஏர்பிடிக்க வேண்டும் மலம் அள்ள வேண்டுமல்லவா அதைத் தடுக்கவே)


ஆதாரம் : காஷ்மீர் பார்ப்பனர் பிரேம்நாத் பஷாஸ் எழுதிய "இந்திய வரலாற்றில் பகவத்கீதை" நூல்


- கா.பிரபு


- - - - -


முருகனுக்காகப் பார்ப்பான் பொங்குவது பித்தலாட்டம்


"முருகன் என்று ஏன் பார்ப்பனர் பெயர் வைப்பதில்லை?"


என்ற கேள்விக்கு தினமலர் அளிக்கும் பதிலைப் பாருங்க.


திருத்தொண்டர் புராணத்தில் காணப்படும், 63 தனியடியார்களில், 13 பேர் பிராமணர்கள்; அவர்களில் ஒருவர் பெயர், முருகர் - வேதாந்தம், தினமலர்.


ஆக இப்போ எந்தப் பாப்பானும் முருகன் பெயர் வைக்கலே.


உண்மையை ஒத்துக்கொண்டதற்கு நன்றி.


- பெல் ஆறுமுகம்


No comments:

Post a Comment