ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 12, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:



  • ஆண்களைப் போல் பெண்களுக்கும் தந்தையின் சொத்தில் பங்கு உள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

  • உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி லோயா மற்றும் பாஜக தலைவர் கோபிநாத் முண்டே மரணம் குறித்தும் சி.பி.அய். விசாரணை வேண்டும் என சிவசேனா கோரியுள்ளது.

  • கரோனா தொற்றுத் தடுப்பு மருந்தினை ரஷ்யா கண்டு பிடித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதனை உரிய ஆய்வு செய்த பின்னரே அது பற்றி முடிவு எடுக்க முடியும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.


டெக்கான் கிரானிகல், சென்னைப் பதிப்பு:



  • சென்னை விமான நிலையத்தில் திமுக எம்.பி. கனிமொழிக்கு இந்தி தெரியுமா தெரியாதா என்பது பிரச்சினை அல்ல; அந்த அதிகாரி, இந்தியக் குடியுரிமை பற்றி கருத்து கூற அதிகாரம் படைத்தவரா? என்பதே என கட்டுரை எழுதப் பட்டுள்ளது.


இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லி:



  • புதிய சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு (EIA) வரைவு, நிலையான வளர்ச்சிக்கான இலக்குக்கு ஆபத்தானது என மகாராட்டிர மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் ஆதித்யா தாக்கரே மத்திய அமைச்சர் ஜவடேகருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

  • பண மதிப்பிழப்பு, 370ஆவது ஷரத்து ரத்து, அயோத்தி கோயில் பூமி பூஜை என மோடி அனைத்தையும் முடித்து விட்டு, அடுத்த நடவடிக்கைக்கு செல்ல இருக்கிறார். மக்கள் முதலில் இருந்து தங்கள் நிலையைத் துவக்க வேண்டும் என வந்திதா மிஸ்ரா தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.


தி இந்து:



  • மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு (EIA) வரைவு, சுற்றுச்சூழல் மீதும், பழங்குடியினர் மீதும் நடத்தப்படும் தாக்குதல் என காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

  • சென்னை விமான நிலையத்தில், உள்ளூர் மொழி தெரிந்தவர்களையும் உரிய எண்ணிக்கையில் பணியமர்த்த விருப்பதாக விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார். எம்.பி. கனிமொழியிடம் இந்தி மொழி குறித்த பிரச்சினையை எழுப்பி யதைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


- குடந்தை கருணா


12.8.2020


No comments:

Post a Comment