தேவக்கோட்டை சுயமரியாதை வீரர் சூறாவளி பொ.லெட்சுமணனுக்கு வீரவணக்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 27, 2020

தேவக்கோட்டை சுயமரியாதை வீரர் சூறாவளி பொ.லெட்சுமணனுக்கு வீரவணக்கம்!


தேவக்கோட்டையில் முதுபெரும் பெரியார் பெருந் தொண்டரும், சீரிய கொள்கைப் பற்றாளருமாக விளங்கிய தோழர் மானமிகு சூறாவளி


பொ.லெட்சுமணன் (வயது 92) அவர்கள் நேற்று (26.8.2020) காலமானார் என்ற செய்தி கேட்டு, மிகவும் துயருறுகிறோம்.


தேவக்கோட்டை பெரியார் பற்றாளர், கழகப் பொறுப்பாளராக நீண்ட காலம் தொண்டாற்றிய தோழர் மானமிகு சிவசூரியன் அவர்களுடன் இணைந்து பணியாற்றியவர் சூறாவளி லட்சுமணன் அவர்கள்.


தேவக்கோட்டைக்குச் செல்லும்போதெல்லாம் தவறாமல் நம்மைச் சந்தித்து உரையாடி மகிழ்ந்தவர்.


அவரது மறைவு அவ்வட்டாரத்திற்கு - கழகத்திற்குப் பெரும் இழப்பு. அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத் தினருக்கும், காரைக்குடி மாவட்ட திராவிடர் கழகத்தவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


மறைந்த சூறாவளி லெட்சுமணனுக்கு நமது வீரவணக்கம்!


 


- கி.வீரமணி


சென்னை


தலைவர்


27.8.2020


திராவிடர் கழகம்


No comments:

Post a Comment