விலைவாசி, பணவீக்கம் கடும் உயர்வு மத்திய புள்ளியில் துறை அமைச்சக அறிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 17, 2020

விலைவாசி, பணவீக்கம் கடும் உயர்வு மத்திய புள்ளியில் துறை அமைச்சக அறிக்கை

புதுடில்லி, ஆக. 17- இந்தியாவில், கரோனா தொற்று அபாயம், தொழில் முடக்கம், வேலையிழப்பு ஆகிய பிரச்சினைக ளுக்கு இடையே விலைவாசி யும் கடுமையாக உயர்ந்துள்ளது.


குறிப்பாக உணவுப் பொருட் களின் விலை பலமடங்கு உயர்ந் துள்ளது.2020 ஜூலை மாதத்திற்கான நுகர்வோர் விலைப் பணவீக்கம் (Consumer Price Inflation - CPI Inflation)  மற்றும் நுகர்வோர் உணவு விலைப் பணவீக்கம் (Consumer Food Price Index) தொடர் பான புள்ளி விவரங்களை, மத்திய புள்ளியியல் மற்றும் திட்டஅமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ளது.


அதில், கடந்த ஜூன் மாதத் தைக் காட்டிலும் ஜூலை மாதத்தில் விலைவாசி கடுமை யாக உயர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதன்படி, இந் தியாவில் கடந்த ஜூன் மாதம் 6.23 விழுக்காடாக இருந்த நுகர்வோர் விலைப் பணவீக் கம், 2020 ஜூலையில், இந்தி யாவின் நகர்ப்புறங்களில் 6.84 விழுக்காடாகவும், கிராமப் புறங்களில் 7.04 விழுக்காடாக வும் அதிகரித்துள்ளது.


2020 ஜூன் மாதம் 8.72 விழுக்காடாக இருந்த நுகர் வோர் உணவு விலைப் பண வீக்கம் ஜூலை 2020-க்கான நுகர்வோர் உணவுப் பண வீக்கம் ஜூலையில் 9.62 விழுக் காடாக அதிகரித்து இருக் கிறது.


இந்தியாவின் நகர்ப்புறங் களைக் காட்டிலும், கிராமப் புறங்களில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. நகர்ப்புறங்களில் உணவு விலைப் பணவீக்கம் 9.05 விழுக்காடாக இருக்கும் நிலையில், அதுவே கிராமப் புறங்களில் 9.89 விழுக்காடு என்ற அளவிற்கு உயர்ந்துள்ள தாக மத்திய புள்ளியில் துறை அமைச்சக அறிக்கை கூறுகிறது.


மீன் இறைச்சி 18.81 விழுக் காடு, பருப்பு வகைகள் 15.92 விழுக்காடு, மசாலா பொருட் கள் 13.27 விழுக்காடு, எண் ணெய் மற்றும் கொழுப்புகள் 12.41 விழுக்காடு, காய்கறிகள் 11.29 விழுக்காடு, முட்டை 8.79 விழுக்காடு, தானியங்கள் 6.96 விழுக்காடு, பால் 6.60 விழுக்காடு என விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.


சர்க்கரை, எரிபொருள் மற்றும் பழங்களின் விலையும், முறையே 3.60 விழுக்காடு, 2.80 விழுக்காடு, 0.13 விழுக் காடு என்று உயர்வைச் சந் தித்துள்ளது.நாடு முழுமைக் குமான நுகர்வோர் பணவீக் கம்- விலைவாசி உயர்வு, தமி ழகத்திலும் எதிரொலித்துள் ளது.


நாடு முழுமைக்குமான சராசரியை விட தமிழகத்தில் விலைவாசி அதிகம் என்று புள்ளியல் துறை அமைச்சகம் புள்ளிவிவரம் கூறியுள்ளது. 2020 ஜூலையில், நாடு தழு விய நுகர்வோர் பணவீக்கம் (Consumer Price Index Inflation)  6.93 விழுக்காடாக இருக்கும் நிலையில், தமிழகத்திலோ அது 7.07 விழுக்காடாக பதி வாகியுள்ளது.கிராமம் - நகரம் ஒப்பீட்டிலும், தமிழகத்தின் நகர்ப்புறங்களில் நுகர்வோர் பணவீக்கம் 6.96விழுக்காடு என்றால் அதைக்காட்டிலும் அதிகமாக தமிழக கிராமப் புறங்களில் நுகர்வோர் பண வீக்கம் 7.24 விழுக்காடாக உள்ளது.


இவ்வாறு புள்ளிவிவர அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment