26.08.2020 புதன் முற்பகல் 11 மணியளவில் ஈரோடு மாவட்டத் திராவிடர் கழக நிர்வாகிகள் கூட்டம் ஈரோடு பெரியார் மன்றத்தில் மாவட்டத் தலைவர் கு.சிற்றரசு தலைமையில் பொதுக்குழு உறுப் பினர்கள் கோ.பாலகிருட்டிணன், இரா.நற்குணன், செ.பிரகாசன், கார்த்திக் ராம் கண் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் 16.08.20 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமை யில் நடைபெற்ற மாவட்டத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வரவேற்று செயல் படுத்துவது என்றும், செப் 17 தந்தை பெரியார் அவர்களின் 142 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவது, சுவரெழுத்துப் பிரச்சாரம் செய்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம், பேரா.ப. காளிமுத்து, மாநகர தலைவர் ந.சிவராமன், கோ.திருநாவுக்கரசு, பெரியார் படிப்பக வாசகர் வட்ட தலைவர் பி.என்.எம் பெரியசாமி, மாவட்டத் துணைத் தலைவர் ந.கிருட்டினமூர்த்தி, அம்மாப் பேட்டை ஒன்றியச் செயலாளர் க.மணிகண்டன், புதிய தோழர் செ.அஜ்சூரியா ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment