பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்களின் ஒருங்கிணைப்புக்குழு ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 6, 2020

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்களின் ஒருங்கிணைப்புக்குழு ஆர்ப்பாட்டம்

சென்னை, ஆக. 6- மீன்வளத் துறையை தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறையாக பெயர் மாற்ற வேண்டும், மீனவர் நலவாரியத்தில் புதிய உறுப்பினர்களைச் சேர்த்து நலத்திட்டங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு மீனவர் இயக்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நேற்று முன் தினம் (ஆக.4) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இதுகுறித்து தமிழ்நாடு மீனவர் இயக்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் கு.பாரதி கூறியதா வது:


மீனவர் நலவாரியத்தில் 3ஆண்டுகளாக புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படவில்லை. இதனால், விபத்து, இறப்பு உட்பட பல் வேறு இக்கட்டான சூழல்களில் மீனவர்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின் றனர். எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லாததால் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத் துக்கு தள்ளப்பட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


செங்கல்பட்டு மாவட்டம், சதுரங்கப் பட்டினம் கடற்கரையில் நடைபெற்ற கண் டன ஆர்பாட்டத்தில் மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் சாரங்கபாணி, மாவட்டச் செயலாளர் செங்கழனி, ஒருங்கிணைப் பாளர் அரிகிருஷ்ணன் மற்றும் மீனவர்கள் கருப்புக் கொடி ஏந்தி சமூக இடை வெளியுடன் ஈடுபட்டனர். பொன்னேரி அருகே பழவேற்காடில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் மாவட்ட பாரம்பரிய மீனவச் சங்கப் பொதுச்செயலாளர் மகேந்திரன் உள்ளிட்டேர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment