சத்துணவு முட்டைகளை உடனடியாக வழங்கவேண்டும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 4, 2020

சத்துணவு முட்டைகளை உடனடியாக வழங்கவேண்டும்!

உயர்நீதிமன்றத்தின் ஆணை வரவேற்கத்தக்கது!


தமிழர் தலைவர் கருத்து


ஊரடங்கு காலத்தில் வழங்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ள சத்துணவு முட்டைகளை வழங்க இன்று (4.8.2020) சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கதாகும். பெருந்தொற்றுக் காலத்தில் குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைப்பதும், குறிப்பாக புரத உணவு கிடைப்பதும் மிகவும் அவசியமானதாகும். இது குறித்து ‘விடுதலை'யில் நாம் விரிவான கட்டுரை ஒன்றையும் வெளியிட்டிருந்தோம். இந் நிலையில், உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. பெற்றோர்களைப் பள்ளிக்கு அழைத்தோ  அல்லது நியாய விலைக் கடைகளின் மூலமோ முட்டை வழங்கப்படவேண்டும் என்றும் மாண்பமை நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கின்றனர்.


அதே போன்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளபடி, மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்குவது குறித்தும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். இதையும் நாம் ‘விடுதலை'யில் சுட்டிக் காட்டியிருந்தோம்.


கரோனாவைக் காரணம் காட்டி, ஏழை, எளிய மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய அடிப்படை வசதிகளை அரசு மறுக்கக் கூடாது.


 


கி. வீரமணி,


தலைவர்


திராவிடர் கழகம்


சென்னை


4.8.2020


No comments:

Post a Comment