மாநகராட்சி ஆணையர் போலி விண்ணப்பம் எனக் கூறி, அதை வழங்கிய பள்ளிகள் மீதான நடவடிக்கைக்கு உறுதி!
கோவை மாநகராட்சிக்குக் கட்டுப் பட்ட பள்ளிகளில் மாணவர் சேர்க் கைக்கான விண்ணப்பப் படிவத்தில் 14ஆவது கேள்வியாக மூன்றாவது மொழி (ஹிந்தி) எடுத்துக் கொள்ள விரும்புகிறாரா அல்லது கைத் தொழில் ஒன்றை அதிகப்படியாகக் கற்றுக் கொள்ள விரும்புகிறாரா என்பதற்கு மாணவரின் பெற்றோர் அல்லது காப்பாளர் தெரிவிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில அரசு 1967ஆம் ஆண்டிலிருந்து இரு மொழிக் கொள்கையை (தாய் மொழி, ஆங்கிலம்) நடைமுறைப்படுத்தி வரும் நிலையில், கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் வழங்கப்பட்ட விண்ணப் பத்தில் 'இந்தி மொழி' கற்பது குறித்த விபரத்தை கேள்வியாகக் கேட்டது பொதுவான விவாதத்தை ஏற்படுத்தியது. மத்திய அரசு அண்மையில் வெளியிட்ட தேசியக் கல்விக் கொள்கை வலி யுறுத்திடும் 'மும்மொழிக் கல்வி‘ கொள் கைக்கு ஆதரவு தேடும் வகையில் விண் ணப்பத்தில் கேள்வி கேட்கப்பட்டது பெரிய சர்ச்சையைக் கிளப்பியது.
இதுகுறித்து விளக்கமளித்த கோவை மாநகராட்சி ஆணையர், மாநகராட்சி சார்பாக அத்தகைய விண்ணப்பம் எதுவும் வழங்கப்படவில்லை எனக் கூறினார். அந்த விண்ணப்பம் போலி யானது எனவும் விளக்கமளித்தார். மேலும் விண்ணப்பம் வழங்கப்பட்டதா கக் குறிப்பிடப்பட்ட மாநகராட்சிப் பள் ளிகடம் மனு விசாரித்து தேவைபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment