அய்தராபாத், ஆக. 16- தெலங் கானா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பில்லி, சூனியம் போன்ற மூடநம்பிக் கையில் மூழ்கியிருந்தனர். அதனால் அவர்கள் வீட்டில் அடிக்கடி பூஜைகள் செய்து வந்துள்ளனர்.. இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு அந்த வீட்டில் இரண்டு பெண்கள், 10 வயதுச் சிறுமி உள்பட நால்வர் விஷம் அருந்தி இறந்து கிடந்தனர். நால்வரின் உடலும் வீட்டின் பின்புறம் கிடந்தது. அருகி லேயே பூஜை நடைபெற்றதற் கான தடயங்களும் காணப் பட்டன. அடுத்த ஜென்மத்தில் உங்களுக்கு பிடித்த மாதிரி பிறக்கலாம் என்று மந்திர வாதி கூறியதை நம்பி அவர் கள் தற்கொலை செய்து இருக் கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 10 வயதுச்சிறுமி யின் உடலில் ரத்தக் காயங்கள் இருந்ததால், வேறு ஏதாவது காரணம் இருக்குமா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment