கரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய - மாநில அரசுகள் தோல்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 24, 2020

கரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய - மாநில அரசுகள் தோல்வி

கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு



கோவை, ஆக.24 கரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் தோல்வி அடைந்து விட்ட தாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டினார்.


கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் ஆய்வுக் கூட்டம் கோவையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.  இதில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தொகுதி மற்றும் வார்டு வாரியாக கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். இதில், பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப் பட்டது. பின்னர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-


கரோனா தொற்றால் தமிழக பொருளாதாரம் பாதிக்கப்பட் டுள்ளது. கோவை, திருப்பூர் மாவட் டங்களில் சிறு, குறு தொழில் துறை யினர் பெரும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் உதவி கிடைக்க வில்லை. 6 மாத காலத்திற்கு வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது சிறு, குறு தொழில் முனைவோரின் கோரிக்கை. அதை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். 6 மாத காலத் திற்கான வட்டியை நீக்கம் செய்ய வேண்டும். இது பற்றி மாநில அரசு, பிரதமரிடம் பேச வேண்டும்.


சட்டசபை தேர்தல் இடப்பங்கீடு குறித்து தேர்தல் நேரத்தில் கூட்டணி கட்சிகளுடன் பேசி முடிவெடுப்போம். அதற்கு முன்பாக கட்சி வளர்ச்சி பணிக்காகப் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளோம்.


கரோனா தடுப்பு நடவடிக் கைகளில் மத்திய, மாநில அரசுகள் முழுமையாக தோல்வி அடைந்து விட்டன. அரசு விழா என்பது மக்கள் பங்கெடுக்கும் விழா. இதில் அனை வருக்கும் மருத்துவ சோதனை செய்ய அனுமதிக்கப்படுகிறதா?.


தவறை மூடி மறைப்பதற்காக, மருத்துவ பரி சோதனையில் கரோனா தொற்று இல்லாதவர்கள் அரசு விழாவில் அனுமதிக்கப்படுவதாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ஆயூஷ் அமைச்சக கூட்டத்தில் இந்தி மொழி தெரிந்தவர்களை அனுமதிப்பது என்ற அதிகாரியின் நடவடிக்கை தவறானது.


'நீட்' தேர்விற்காக யாரும் உயிரை இழக்க கூடாது. மாநில அரசு விரும்பவில்லை என்றால் 'நீட்' நடத்த தேவையில்லை என ராகுல் காந்தி ஏற்கெனவே தெரிவித்து இருந்தார். நீட் தேர்வை ரத்து செய்யாவிட்டால் அ.தி.மு.க. மக்களிடம் வாக்கு கேட் பது சாத்தியமற்றது.  இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment