உலகின் மூத்த மக்களாய் திராவிடர்கள் பிறந்தார்!
ஓங்குபுகழ் புத்தரும், வள்ளுவரும் பேரறிஞர்களாய்த் திகழ்ந்தார்!
வந்தேறி ஆரியர் இதுகண்டு கொடுநஞ்சைக் கக்கினார்!
சொந்த நாட்டார் நஞ்சுண்டு மயக்கத்தில் சிக்கினார்!
பொய்யான கடவுள், இதிகாசப் புரட்டுகளை அளந்தார்!
பொல்லாத ஜாதியால் தொல் குடியைப் பன்னூறாய்ப் பிளந்தார்!
கள்ளமிலா நம்மினத்தார் கயவர்களின் கன்னியிலே விழுந்தார்!
பிழைக்க வந்த பிச்சையினம் பேரரசைக் கவர்ந்தார்!
அண்டவந்தார் அரியணையில், அரவணைத்தார் அடிமை வாழ்வில்!
ஆரியக்குடி அதிகாரத்தில், ஆதிக்குடி ஆழக் குழியில்!
மநுமைந்தர்கள் மாளிகையில், மண்ணின் மைந்தர்கள் மண்குடிலில்!
மானக்கேடர்கள் கல்விக்காட்டில், மான மறவர்கள் கைநாட்டில்!
ஈரோட்டில் பெரியார் எரிமலையாய் வெடித்தார்!
ஈனர்களின் ஆரியக் கோட்டை சில்லாகச் சிதறியது!
நடக்கவும், படிக்கவும், நாடாளவும் திராவிடர் திரும்பினார்!
சனாதனம், ஜாதிப் பாம்பு பதுங்க இடம் தேடிப் பாய்ந்தது!
வாழ்ந்த இனம் விழுந்த இடம் கண்டவர்,
விழுந்த நம்மை எழுந்து நட என்றவர்,
வீழ்த்தியோர் செயலை உலகு அறியச் செய்தவர்,
வீரமிலாக் கோழையர், அணைத்து அழித்ததைச் சொன்னவர்!
இழந்துபோன விழுமியத்தை மீட்க வழி கண்டவர்,
ஆரியர் திராவிடத்தை அழித்திடாது காத்தவர்,
அறிவாசான் பெரியார் பிறந்தநாளில், நன்றி காட்டிச் சூளுரைப்போம்!
அய்யா பணி முடிக்க, தமிழர் தலைவர் காட்டும் திசை பயணிப்போம்!
வாழ்க பெரியார்! வெல்க திராவிடம்!
- முனைவர் க.அன்பழகன்
கிராமப்பிரச்சாரக் குழு அமைப்பாளர்
திராவிடர் கழகம்
No comments:
Post a Comment