டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:
- புதிய கல்விக் கொள்கைக்கு திராவிடர் கழகம், கல்வி யாளர்கள் கடுமையான எதிர்ப்பு.
டெக்கான் கிரானிகல், சென்னைப் பதிப்பு:
- கைத்தறி வாரியத்தைத் தொடர்ந்து விசைத்தறி வாரியத்தையும் மத்திய அரசு கலைத்து விட்டது.
இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லி:
- பரசுராமனுக்குச் சிலை நிறுவுவதில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதிக் கட்சிக்கும் மாயாவதியின் பகுஜன் சமாஜ்கட்சிக்கும் இடையே கடும் போட்டி. பார்ப்பனர்களின் வாக்கு வங்கியைக் குறிவைத்துச் செயல்படுவதாக செய்தி.
- உச்ச நீதிமன்றத்திற்கும் மேலே இன்னொரு முறையீடு மன்றம் இல்லை என்பதனால் இறுதியே ஒழிய அது தவறே செய்யவில்லை என்பதனால் அல்ல என்பதை உச்ச நீதிமன்றம் உணர வேண்டும் என மூத்த பத்திரிக்கையாளர் கரன் தாபர் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
- மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. அமலாக்கம் குறித்த தவறான முடிவுகளால் பொருளாதாரக் கட்டுமானம் அழிந்து விட்டது என காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
- தேசியக் கல்விக் கொள்கையில் வலியுறுத்தப்படும் தொழிற் கல்வி, கிராம மற்றும் குறைந்த வருவாய் உள்ள குடும்ப மாணவர்களுக்குப் பிரச்சினையை உருவாக்கும் என அன்புச் செல்வன் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்துஸ்தான் டைம்ஸ்:
- சென்னை விமான நிலையத்தில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களை இந்தி பேசத் தெரியவில்லை எனில் நீங்கள் இந்தியரா? என்று கேட்ட செக்யூரிட்டி அதிகாரி குறித்து விசாரணை நடத்தப்படும் என விமான நிலைய அதி காரி தெரிவித்துள்ளார்.
- மதச்சார்பின்மைக் கொள்கை குறித்து எதிர்க்கட்சிகளி டையே தெளிவு இல்லை என எழுத்தாளர் ரோஷன் கிஷோர் தனது கட்டுரையில் கூறியுள்ளார்.
- குடந்தை கருணா
10.8.2020
No comments:
Post a Comment