அமெரிக்காவில் மேலும் ஒரு நிறுவனத்தின் மீது ஜாதியப் பாகுபாடு காட்டியதாக வழக்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 10, 2020

அமெரிக்காவில் மேலும் ஒரு நிறுவனத்தின் மீது ஜாதியப் பாகுபாடு காட்டியதாக வழக்கு

அமெரிக்கா, ஆக. 10- அமெரிக் காவில் இந்தியர்கள் ஆதிக்கம் நிறைந்த சிஸ்கோ நிறுவனத் தில் தாழ்த்தப்பட்ட பிரிவி னரை மிகவும் அவமானப்படுத் தியதாக அங்கு இருந்த பார்ப்பன அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டு அது விசாரணையில் இருந்துவரும் நிலையில், தற்போது ஹெச்சிஎல் நிறுவனத்தின் அமெரிக்க கிளையான ஹெச்சிஎல் அமெ ரிக்கா என்ற நிறுவனமும் ஜாதி ரீதியில் அவமானப் படுத்தப்பட்ட வழக்கில் சிக்கி யுள்ளது கலிபோர்னியாவில் உள்ள ஹெச்சிஎல் நிறுவனத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு பணியாளர், ஜாதிய அடிப் படையில் தனது உயர் அதி காரியால் தான் பணிநீக்கம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.


அவர், கலிபோர்னியாவி லுள்ள மேல்மட்ட நீதிமன் றத்தில் வழக்குத் தொடர்ந்து உள்ளார். மிகவும் பிற்படுத் தப்பட்ட பிரிவைச் சேர்ந்த தன்னை உயர்ஜாதியைச் சேர்ந்த சிறீநிவாஸ் சக்கர வர்த்தி என்பவர் ஜாதிய அடிப்படையில் பாகுபாடு காட்டித் தண்டித்தார் என்று தான் தொடுத்த வழக்கில் குறிப்பிட்டுள்ளார். என்.டி. ராமாராவ் காலத்தில் குறிப் பிட்ட பிற்படுத்தப்பட்டவர்க ளுக்கு மாநில அரசு அதிக சலுகைகள் வழங்கியுள்ளது. அதற்கு முன்பு அப்பிரிவினர் பெரும் முதலாளிகளில் வீட் டுத்தோட்டத்தில் அடிமை வேலை மட்டுமே செய்யும் இனமாக இருந்தனர். தெலுங்கு மொழித் திரைப்படங்களில் கூட இது காட்டப்படும்.


இந்த நிலையில் குறிப் பிட்ட பிரிவினருக்கு என்.டி ராமாராவ் காலத்தில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதனை அடுத்து அப்பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன.


இதனால் பெரும் முதலா ளிகள் இப்பிரிவினர் மீது கடு மையான வெறுப்பை காட்டி வந்தனர். ஒரு காலத்தில் வீட் டில் கைகட்டி வாய் பொத்தி நிற்கும் ஒருவரின் மகன்கள் இன்று படித்து பெரும் பத விகளில் தங்களது பிள்ளைக ளுக்குச் சரிசமமாக அமர்வது அவர்களது மனதில் நீறு பூத்த நெருப்பாய் இருந்து கொண்டு இருந்தது.


ஆந்திரா, தெலுங்கானா,  வட கிழக்கு கர்நாடகா, தெற்கு மகாராஷ்டிரா பகுதிகளையும் தாண்டி தற் போது இந்த ஜாதிய வன்மம் அமெரிக்காவரை சென்றுள் ளது குறிப்பிடத்தக்கதாகும். ஏற்கனவே சிஸ்கோ நிறுவனம் ஜாதியப் பாகுபாடு காரண மாக மாகாண நீதிமன்றத்தால் எச்சரிக்கை செய்யப்பட்டு வழக்கு நடைபெற்றுக்கொண்டு இருக்கும் நிலையில், தற்போது மற்றொரு நிறுவனமும் இந்த ஜாதியப் பாகுபாடு குற்றச் சாட்டில்  சிக்கியுள்ளது


No comments:

Post a Comment