கருநாடக மாநில திராவிடர் கழகத்தின் காணொலி கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 28, 2020

கருநாடக மாநில திராவிடர் கழகத்தின் காணொலி கருத்தரங்கம்


13.8.2020 வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு மாநில அமைப்பாளர் முத்து செல்வன் தலைமையில் நடைபெற்றது. மாநில செயலாளர் இரா.முல்லைக்கோ அனைவரையும் வரவேற்றார். சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் இரா.தே.வீரபத்திரன் அறிமுகவுரையாற்றினார். ஓசூர் மாவட்டக் கழகத் தலைவர் சு.வனவேந்தன், மாநில துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, மாநில மாணவர் கழகச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் முன்னிலை வகித்து உரையாற்றினர். புதிய கல்விக் கொள்கை - குலக்கல்வி என்ற தலைப்பில் மாநில கிராம பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன் மிக விளக்கமாக உரையாற்றினார். நிறைவாக வழக்குரை ஞர் பிரிவுத் தலைவர் சே.குணவேந்தன் நன்றியுரையாற்றினார். காணொலி நிகழ்வில் தமிழ்நாடு, புதுவை, கருநாடகம், துபாய், அமெரிக்கா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் கழகத் தோழர்கள் பெரும் அளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


No comments:

Post a Comment