புதுடில்லி, ஆக. 28- நாடு முழுவதும் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் இடையே நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதன்படி வரும் 14ஆம் தேதி முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உறுப்பினர்கள் சமூக இடைவெளியுடன் அமர்வதற்கு ஏற்றவாறு நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடத்துவது குறித்து கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி மாநிலங்களவைத் தலைவர் வெங்கையாநாயுடு மற்றும் மக்கள வைத் தலைவர் ஓம் பிர்லா ஆகியோர் மழைக்கால கூட்டத்தொடர் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர். அதன்படி கூட்டத்தொடர் துவங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து முடிக்கும்படிக்குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.
நாடாளுமன்ற நடவடிக்கைகள் எந்த விடுமுறையும் இல்லாமல் இயங்கும் எனவும், அமைச்சரவைக் குழு மொத்தம் 18 அமர்வுகள் இருக்கும் என்றும் அதன் தேதிகள் பின்னர் தெரிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. முன்னதாகக் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடரின் இரு அவைகளின் நாட்கள் குறைக்கப்பட்டன. தொடர்ந்து ஆறு மாத காலத்திற்குள் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் கூட்டப் பட வேண்டும் என்பது விதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment