சென்னை, ஆக. 15- பொதுமுடக்கம் முடியும் வரை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம், உயர் அழுத்த மின்சாரத்தைப் பயன்படுத் தும் தொழிற்சாலைகளிடம் இருந்து குறைந்தபட்ச கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில், தென்னிந்திய நூற்பாலை சங்கம் சார்பில் தாக்கல் செய்த மனுவில், கரோனா பொதுமுடக்கம் காரணமாக 3 மாதங்களுக்கு மேலாக அனைத்து நூற்பாலைகளும் மூடப்பட்டு உள் ளன. தொழிலாளர்களும் பணிக்கு வருவது இல்லை. நூற்பாலைகளின் அனைத்து நிதி நடவடிக்கைகளும் முடங்கிப்போய் உள்ளன.
இந்த நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் உயர் அழுத்த மின் கட்ட ணத்தை முழுமையாக செலுத்தும்படி நிர்பந்திக்கிறது. எனவே இந்த உத்தர வுக்கு தடை விதிக்கவேண்டும். குறைந்த பட்ச உயர்மின் அழுத்தத்துக்கான 20 சதவீதத்தை மட்டும் கட்டணமாக வசூலிக்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இதேபோன்று உயர் மின் அழுத்தம் பயன்படுத்தக்கூடிய மற்ற தொழில் நிறுவனங்களின் சார்பிலும் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
இந்த வழக்குகளை நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் காணொலி மூலம் விசாரித்தார். வழக்கை விசா ரித்த நீதிபதி கரோனா பொதுமுடக்க காலக்கட்டத்தில் தொழிற்சாலைகள் இயங்காத நிலையில், அதிகபட்சமான மின் கட்டணத்தை செலுத்த கூறுவது சட்டவிரோதமானது. மின் வாரியத் தின் இத்தகைய நடவடிக்கைகள் தொழிற்சாலைகளை மூடும் நிலைக்கு தள்ளிவிடும் என வேதனை தெரிவித்தார்.
பொதுமுடக்கம் முடியும் வரை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம், உயர் அழுத்த மின் சாரத்தைப் பயன்படுத்தும் தொழிற் சாலைகளிடம் இருந்து குறைந்தபட்ச கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment