திரு.வி.க. பிறந்த நாள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 28, 2020

திரு.வி.க. பிறந்த நாள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


தந்தை பெரியாரின் உற்ற தோழரும், தொழிற்சங்க மேதை,யும், இலக்கியவாதியுமான தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்களின் பிறந்த நாள் 26.8.2020 அன்று கொண்டாடப்பட்டது. வடசென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் அன்று காலை 8 மணிக்கு செம்பியம் திரு.வி.க. நகரில் உள்ள திரு.வி.க. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை மண்டலச் செயலாளர் தே.செ.கோபால் முன்னிலையில், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் மாலை அணிவித்தார். கழகத் தோழர்கள் "திரு.வி.க. புகழ் ஓங்குக" என்று முழக்கம் எழுப்பினர். வடசென்னை மாவட்டச் செயலாளர் தி.செ.கணேசன், துணைத் தலைவர் கி.இராமலிங்கம், துணை அமைப்பாளர் சி.பாஸ்கர், செம்பியம் தலைவர் பா.கோபால கிருட்டிணன், செயலாளர் டி.ஜி.அரசு, கேப்டன் இரமேசு, ஜி.கோபிநாத் மற்றும் தோழர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment