பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட பிறகே டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 15, 2020

பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட பிறகே டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள்

சென்னை,ஆக.15, பள்ளி, கல்லூரிகள் திறந்தால்தான் டி.என்.பி.எஸ்.சி.  தேர்வு களை நடத்த முடியும். கரோனா காரணமாக, இந்த ஆண்டு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அரசுப் பணியிடங்களில் 50 சதவீதம்தான் நிரப்ப முடியும். நடத்த இயலாத தேர்வுகள் அடுத்த  ஆண்டு தேர்வுக்கால அட்டவணையில் சேர்க்கப் பட்டு நடத்தப்படும். டிஎன்பிஎஸ்சி தேர்வின் வெளிப்படைத்தன்மையை மேலும் அதிகரிக்கும் பொருட்டும், தேர்வர்களுக்கு கூடுதல் சேவைகள் வழங்கும் வகை யிலும் தேர்வாணையத்துக்குப் புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்வர்கள் உரிய கட்டணம் செலுத்தி தங்கள் விடைத்தாளை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், பழைய தேர்வுகளின் கேள்வித்தாள் களும் இணையதளத்தில் இடம்பெறும்.இவ்வாறு உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.


No comments:

Post a Comment