டாக்டர் தாரா நடராசன் மறைவு தமிழர் தலைவர் இரங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 15, 2020

டாக்டர் தாரா நடராசன் மறைவு தமிழர் தலைவர் இரங்கல்


சீரிய தமிழறிஞரும், தமிழ்ப் பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தருமான டாக்டர் அவ்வை நடராசன் அவர்களது வாழ்விணையர் டாக்டர் (மருத்துவர்) தாரா நடராசன் அவர்கள் நேற்றிரவு (14.8.2020) 10 மணியளவில் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனையும், துயரமும் அடை கின்றோம்.


மறைந்த டாக்டர் தாரா நடராசன் அவர்கள் சிறந்த மருத்துவர் மட்டுமல்ல, நிறைந்த பகுத்தறிவாளர். விடுதலை வாசகர். ஓய்வு பெற்ற பின்பும், கொள்கை உறுதியுடன் பெரியார் திடலில் பலமுறை முழங்கியவர்.


அவரின் துவக்கப் பெயர் இங்கர்சால் என்பதாகும்; பிறகுதான் அது ‘தாரா'வாக மாற்றப்பட்டது.


அவரது மறைவினால் நேரடி இழப்புக்கு ஆளாகி யுள்ள நண்பர் தமிழறிஞர் பண்பாளர் அவ்வையார் அவர்கட்கும், அவரது பிள்ளைகள், குடும்பத்தினருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


 


- கி.வீரமணி


தலைவர்


திராவிடர் கழகம்


சென்னை


15.8.2020


No comments:

Post a Comment