நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி ராஜஸ்தான் மக்களுக்கு கிடைத்த வெற்றி
முதல்வர் அசோக் கெலாட்
ஜெய்ப்பூர்,ஆக.15, சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் கிடைத்த வெற்றி ராஜஸ்தான் மக்க ளுக்குக் கிடைத்த வெற்றி என்று முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்த முன்னாள் துணை முதல்வரும், மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவருமான சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியில் இருந்ததால் ராஜாஸ்தான் அரசியலில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குழப்பம் நீடித்து வந்தது. இதனிடையே கடந்த 13ஆம் தேதி அன்று நடைபெற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத் தில் சச்சின் பைலட் அவரது ஆதரவாளர்களுடன் கலந்து கொண்டதால் சமரசம் ஏற்பட்டது.
இதனை அடுத்து நேற்று (14ஆம் தேதி) காலை ராஜஸ் தான் சட்டப்பேரவை கூடியது. இதில் அசோக் கெலாட் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் முதல்வர் அசோக் கெலாட் வெற்றி பெற்றார்.
இதனை அடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய தாவது: "நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றியால் மாநிலம் முழுவதும் மகிழ்ச்சி அலை பரவியுள்ளது. மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரம், கர்நாடகம், அருணாச்சலப் பிரதேசம், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாஜக செய்த சதித்திட்டத்தை ராஜஸ்தானிலும் செயல்படுத்த முயன்றது. ஆனால், ராஜஸ்தானில் பாஜகவின் சதித்திட்டம் தோல் வியை தழுவியுள்ளது" என்றார்.
"நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி என்பது மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியை கவிழ்க்கும் சக்திகளுக்கு எச்சரிக்கை செய்தியாக உள்ளது. ராஜஸ்தான் மக்களின் நம்பிக்கையும், எங்களது ஒற்றுமையுமே தற்போது வென்றுள்ளது' இவ்வாறு தெரிவித்தார்.
களிமண் பூசிக்கொண்டு சங்கு ஊதினால் கரோனாவிலிருந்து தப்பலாமாம்
கூறுகிறார் பா.ஜ.க. எம்.பி.
ஜெய்ப்பூர்,ஆக.15, கரோனா பரவல் தடுப்பு நடவடிக் கையாக மத்திய அரசும், மாநில அரசுகளும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகின்றன. ஆனால், கரோனா தொடர்பாக அறிவியலுக்கு மாறான கருத்துகளை பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் பரப்பி வருகின்றனர்.
ராஜஸ்தான் எம்பி.: ராஜஸ்தான் மாநிலத்தில், டாங்க்-சவாய் மாதோபூரைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. சுக்பீர் சிங் கரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி கிடக்க வேண்டுமானால், களிமண் சகதியில் அமர்ந்து கொண்டு சங்கு ஊத வேண்டும் என்று கூறியுள்ளார்.
அசாம் சட்டமன்ற உறுப்பினர்: அசாம் மாநில பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் சுமன் ஹரிபிரியா கூறுகையில், பசு மூத்திரம், சாணம்மூலம் கரோனாவை விரட்ட முடியும் என்கிறார். குஜராத்தில் இருக்கும் சில மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு ஆயுர்வேத மருந்துகள் வழங்கப்படுகின்றன. கரோனா நோயாளிகள் பசுவிற்கு அருகில் அமர வைக்கப்பட்டு, மாட்டுச் சாணம், மாட்டு மூத்திரம் மூலம் தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தம் வழங்கப் படுகிறது என்றும் பேசியிருந்தார்.
மத்திய அமைச்சர்: மத்திய அமைச்சர் அர்ஜூன் ரம்பால் மேக்வால் கூறுகையில், கரோனாவை விரட்ட வேண்டு மானால், அப்பளம் சாப்பிட வேண்டும் என்றார். அத்மநிர்பர் திட்டத்தின் கீழ் கரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் அப்பளம் தயாரிக்கப்படுகிறது. பாபி ஜி அப்பளம் வந்துள்ளது. அதை வாங்கிச் சாப்பிடுங்கள் என்று கூறி இருந்தார். பின்னர் அவருக்கே கரோனா வந்ததும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு பா.ஜ.க.வினர் பலரும் அறிவியலுக்கு புறம்பான பிற்போக்குக் கருத்துகளை வெளியிட்டு வரு கின்றனர். மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசோ அவற்றைக் கண்டிக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment