மறுஅறிவிப்பு வரும்வரை எக்ஸ்பிரஸ் ரயில்கள், புறநகர் ரயில்கள் காலவரையின்றி ரத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 15, 2020

மறுஅறிவிப்பு வரும்வரை எக்ஸ்பிரஸ் ரயில்கள், புறநகர் ரயில்கள் காலவரையின்றி ரத்து

புதுடில்லி, ஆக. 15- கரோனா பரவலைத் தொடர்ந்து ஊரடங்கு அறிவிக்கப்பட்ட தால், கடந்த மார்ச் மாத இறுதியில் நாடு முழுவதும் எக்ஸ்பிரஸ் ரயில்கள், புறநகர் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட் டன. ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதெல் லாம், ரயில் சேவை ரத்தும் நீட்டிக்கப் பட்டது.


வழக்கமான ரயில் சேவைகள் அனைத் தும் காலவரையின்றி ரத்து செய்யப்படுவ தாக ரயில்வே நிர்வாகம் நேற்றுமுன்திகம் அறிவித்தது.


இதுகுறித்து ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப் பட்டு இருப்பதாவது:-


ஊரடங்குக்கு முன்பாக இயக்கப்பட்டு வந்த வழக்கமான எக்ஸ் பிரஸ் ரயில்கள், புறநகர் ரயில்கள் அனைத்தும் மறுஉத்தரவு வரும் வரை (காலவரையின்றி) ரத்து செய் யப்படுகிறது. மற்றபடி, தற்போது இயக்கப் பட்டு வரும் 230 சிறப்பு ரயில்கள், தொடர்ந்து இயக்கப் படும்.


மும்பையில், மாநில அரசின் வேண்டு கோளின்பேரில், அத்தியா வசியப் பணி களில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் பயணம் செய்வதற்காக குறைந்த அளவில் புறநகர் ரயில்கள் இயக்கப் பட்டு வருகின்றன. அந்த புறநகர் ரயில்களும் தொடர்ந்து இயக்கப் படும். சிறப்பு ரயில்களுக்கு பயணிகளின் ஆதரவு குறித்து தொடர்ந்து கண்காணிக் கப்படும். தேவைப்பட்டால், கூடுதலாக சிறப்பு ரயில்கள் இயக்கப் படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


காலவரையின்றி ரயில்கள் ரத்து செய் யப்படுவதால், நடப்பு நிதியாண்டில் சுமார் ரூ.40 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்று ரயில்வே நிர்வாகம் மதிப்பிட்டுள்ளது.


No comments:

Post a Comment