மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 26, 2020

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது

மேட்டூர், செப்.26 நீர்வரத்து அதிகரித்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. 


கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இவ்வாறு திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழகம் மற்றும் கர்நாடக எல்லை பகுதியான பிலிகுண்டுலுவை கடந்து தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்தடைகிறது.  அதிகபட்சமாக அணைக்கு வினாடிக்கு 71 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் வந்தது.   கடந்த 21-ஆம் தேதி 89 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் அதிகரித்து கொண்டு வந்தது. நேற்று காலை 99.62 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் மதியம் சுமார் 12.30 மணி அளவில் 100 அடியை எட்டியது இந்த ஆண்டில் தற்போது தான் முதல் முறையாக அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டி உள்ளது.


No comments:

Post a Comment