பெரியார் கேட்கும் கேள்வி! (102) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 13, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (102)


எல்லாரையும் சமமாயும் சகோதரராயும் பாவிக்க வேண்டும். எல்லாரிடத்திலும் அன்பு செலுத்துதல் வேண்டும். தீண்டாமையை அறவே ஒழிக்க வேண்டும். தாசித் தொழில் ஒழிய வேண்டும். பாலிய விவாகம் ஒழிந்து நமது பெண்கள் எப்பொழுதும் சுகமாயிருக்க வேண்டும். பொய் சொல்லக் கூடாது. திருடக் கூடாது. யோக்கியமாய் சுயமரியாதையுடன் வாழ வேண்டுமென்று இது போல் சொல்லி வருகின்றேன். இதைச் சில அயோக்கியர்களும் அவர் தம் பத்திரிகைகளும், பொறாமை, சுயநலம், அற்ப புத்தி காரணமாக நாஸ்திகம் என்று பேசியும், எழுதியும் வருகின்றன. இவையெல்லாம் நாஸ்திகமாயின் பின் ஆஸ்திகம் தான் என்ன?
- தந்தை பெரியார், "குடிஅரசு 15.04.1928
மணியோசை"


No comments:

Post a Comment