மதத்தினால் ஏற்பட்டு வரும் கெடுதிகள் என்ன என்று பார்ப்போமானால் முதலாவது மதம் மனிதனின் அறிவையே அடியோடு கெடுத்து விடுகின்றது. எப்படியெனில், ஒவ் வொரு மதக்காரனும் தனது மதப்படி ஒரு கடவுள் உண்டு என்று நினைப்பதோடு தனது மதத்தையும் கடவுள் உண்டாக்கினார் என்று நம்புவதாகக் காணப்பட்டாலும் மற்றொரு மதக்காரனும் அப்படித்தானே சொல்லுகிறான். ஆதலால் அவர்களுக்கு வேறு மதத்தையும் நமக்கு வேறு மதத்தையுமா கடவுள் செய்திருப்பார் என்று சிறிதாவது யோசிக்கவோ, அல்லது நம்மதத்தை வையும்படியோ அன்று ஏற்காத படியோ அவர் மற்றொரு மதத்தை உண்டாக்கி இருப்பாரா? அப்படியானால் இது ஒன்றுக் கொன்று முரண்பாடல்லவா? என்று எவருமே நினைப்ப தில்லை. எவருமே என்றால் மத ஆச்சாரியார்கள், மத அபி மானிகள் என்பவர்கள் முதலாக எவருமே கருதுவதில்லையே ஏன்?
- தந்தை பெரியார், “குடிஅரசு” 11.8.1929
‘மணியோசை’
No comments:
Post a Comment