சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சென்னை அண்ணாசாலை அண்ணா மேம்பாலம் அருகில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் பெருமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தந்தை பெரியார் பிறந்த நாளான இன்று புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் சென்னை பெரியார் திடலுக்கு ஊர்வலமாக வந்து தந்தை பெரியார் சிலை முன்பும், நினைவிடம் முன்பும் வீர வணக்கம் செலுத்தினர்
சமாஜ்வாடி கட்சியின் சார்பில் பொறுப்பாளர்கள் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை
காங்கிரசின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் விடுதலை சிறுத்தைகளின் கட்சியின் சார்பிலும் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை
தந்தை பெரியார் நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்பு
தந்தை பெரியார் 142ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலரை தமிழர் தலைவர் வெளியிட்டார். கழகப் பொறுப்பாளர்கள் பெற்றுக் கொண்டனர்.
பெரியார் மருத்துவ நிதிக்கு பெரியார் புத்தக நிலைய மேலாளர் டி.கே. நடராசன் ரூ.25,000/-த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார். விடுதலை வளர்ச்சி நிதி 86ஆம் ஆண்டுக்காக ரூ.8,600/-அய் சென்னை பெரம்பூர் இந்திராணி - சபாபதி குடும்பத்தின் சார்பில் தமிழர் தலைவரிடம் துணைப் பொதுச் செயலாளர் ச. இன்பக்கனி வழங்கினார்.
No comments:
Post a Comment