கரோனா பாதிப்பில் 2 ஆம் இடத்தில் உள்ள தமிழகத்திற்குக் குறைவான நிதியை ஒதுக்கிய மத்திய அரசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 12, 2020

கரோனா பாதிப்பில் 2 ஆம் இடத்தில் உள்ள தமிழகத்திற்குக் குறைவான நிதியை ஒதுக்கிய மத்திய அரசு

புதுடில்லி, செப். 12 கரோனா நோய்த் தொற்றை சமாளிக்கும் வகையில் 15-ஆவது நிதிக்குழு பரிந்துரையின்படி தமிழகத்திற்கு 6- ஆவது தவணையாக ரூ.335.41 கோடி நிதியை மத்திய நிதி அமைச்சகம் ஒதுக்கீடு செய்துள்ளது.


தேசிய அளவில் கரோனா பாதிப் பில் இரண்டாவது இடத்தில் உள்ள தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் கோரிக்கை விடுத் திருந்த நிலையிலும் குறைவான நிதியே ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.


கரோனா வைரஸ் தொற்றை கட் டுப்படுத்துவதற்காக முதன்முதலில் ஊரடங்குஅமல்படுத்தப்பட்டபோது, மருத்துவக் கருவிகளை வாங் குவதற்காக ரூ.3,000 கோடி, கரோனாபாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்காகரூ.9000கோடி சிறப்புநிதி,மக்களுக்குவாழ்வாதார உதவி களை வழங்க ரூ.4,000 கோடி எனமொத்தம்ரூ.16,000கோடிவழங்க வேண்டும்என்றுமத்தியஅரசிடம் முதல்வர்எடப்பாடிபழனிசாமி ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருந் தார்.  கரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாட்டிற்கு உடனடியாக 3000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத் தியிருந்தார்.


கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து 10 மாநில முதல்வர்களுடன்  பிரதமர் மோடி நடத்திய ஆலோ சனைக்கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்படும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்து, இக்கோரிக்கையை முன்வைத்தார்.தமிழகத்தில் தினமும் சராசரியாக 65 ஆயிரம் பரிசோதனைகள் மேற் கொள்ளப்படுகின்றன.இதற்கு ஒவ் வொரு நாளும் 5 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இந்த தொகையில் 50 சதவீதத்தை பிரதமர் கேர்ஸ் நிதியிலிருந்து மத்திய அரசு வழங்கவேண்டும் என்று முதலமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார்.


ஆனால், மத்திய பாஜக அரசு, தமிழக அரசின் கோரிக்கைக்கு எந்த வித மதிப்பும் அளிக்காமல் வெறும் 335.41 கோடி ரூபாயை  ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும் மோடி அரசின் செய லுக்கு  அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் கோப மும் எதிர்ப்பும் எழுந்துள்ளது. கரோ னாவால் பாதிக்கப் பட்டிருக்கும் தமிழகம், கேரளா, மேற்குவங்கம், பஞ்சாப் உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு நிதி அமைச்சகம் ரூ. 6,195 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. கேரளாவுக்கு ரூ.1,276.91 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பஞ்சாப்புக்கு ரூ.638.25 கோடி, மேற்கு வங்கத்திற்கு ரூ.417.75 கோடி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.குறைந்த பட்சமாக மேகாலயாவிற்கு ரூ.40.91 கோடிஒதுக்கப்பட்டுள்ளது.கரோனா நெருக்கடியில் உள்ள மாநில அரசு களுக்கு உதவும் வகையில், 15 ஆவது நிதிக் குழுவின் பரிந்துரையின்படி 14 மாநிலங்களுக்கு ரூ.6,195 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிவிட்டுள்ளார்.


 


No comments:

Post a Comment