அயோத்தி ராமர் கோவில் பெயரில் மோசடிகள் வங்கிக் கணக்கில் இருந்தும் ரூ. 6 லட்சம் கையாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 12, 2020

அயோத்தி ராமர் கோவில் பெயரில் மோசடிகள் வங்கிக் கணக்கில் இருந்தும் ரூ. 6 லட்சம் கையாடல்

அயோத்தி, செப்.12 அயோத்தி ராமர் கோயில் கட்டும்பணிக்கான நன் கொடை வசூலில்ஆங்காங்கே மோச டிக் குற்றச்சாட்டுக்கள் எழுந்து வரு கின்றன.


உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரத்தில், நரேந்திர ராணா என்பவர் விசுவ இந்து பரிஷத் (விஎச்பி) பெயரில் அலுவலகம் திறந்து, ராமர் கோயில் பெயரில் பல லட்சங்களை சுருட்டினார்.மீரட்மாவட்டகிராமங் களில்வீடு,வீடாகவும்வசூல் வேட்டையாடினார்.இதற்கென ரசீதுகளையும் அச்சிட்டிருந்தார். தற்போது அவரை காவல்துறை யினர் கைது செய்துள்ளனர்.


இந்நிலையில், ராமர் கோவில் அறக் கட்டளை வங்கிக்கணக்கில் இருந்தே ரூ. 6 லட்சம், போலி காசோலை மூலம் கையாடல் செய்யப்பட்டு இருப்பது அம்பலமாகி இருக்கிறது. ராமர் கோவில் கட்டுமானப் பணி களுக்காக அமைக்கப்பட்டுள்ள ‘ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக் கட்டளை’ பெயரில் உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள ‘பாங்க் ஆப் பரோடா வங்கி’யில் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.


அந்த வங்கிக் கணக்கில் இருந்து தான், செப்டம்பர் 2-ஆம் தேதி ரூ. 2.5 லட்சமும், 3-ஆம் தேதி ரூ. 3.5 லட்சமும் போலி காசோலை அளித்து பெறப்பட்டுள்ளது. இதனி டையே, செப்டம்பர் 8-ஆம் தேதி 3- ஆவது முறையாகவும் போலி காசோலையைப் பயன்படுத்தி ரூ.9 லட்சத்து 86 ஆயிரத்தை எடுக்க முயன்றபோதுதான் மோசடி வெளியே தெரிய வந்துள்ளது.


“பெரிய தொகை என்பதால், அதை உறுதி செய்வதற்காக, வங்கி யில் இருந்து அறக்கட்டளை நிர் வாகத்தை தொடர்பு கொண்டனர்; அப்போதுதான் எங்களுக்கே காசோலை மோசடிவிவகாரம்தெரிய வந்தது'' என்று அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் ‘அப்பாவி’யாக பேட்டியளித்துள் ளார். தற்போது காவல்துறையினர், அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, விசா ரணை நடத்தி வருகின்றனர்.


No comments:

Post a Comment