மோடி அரசுமீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
புதுடில்லி, செப்.7 நாட்டின் பொருளா தார நிலை குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது சமூக ஊடக தளங்களில் தொடர் வீடியோவை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், தனது 4 தொடர் வீடியோவின் 3 நிமிடங்கள் ஓடக்கூடிய 3 ஆம் பாக வீடியோவை டிவிட்டரில் நேற்று (6.9.2020) பதிவிட் டார்.
அதில், ராகுல் கூறியிருப்பதாவது:
நாட்டின் உள்நாட்டு உற்பத்தி, (ஜிடிபி) வரலாறு காணாத சரிவை சந்திக்க மற்றுமொரு காரணம் மோடி அரசின் ஜிஎஸ்டி வரி. இது, லட்சக் கணக்கான சிறு வணிகங்கள், கோடிக் கணக்கான வேலைகள் மற்றும் இளை ஞர்களின் எதிர்காலம், மாநிலங்களின் நிதி ஆரோக்கியம் ஆகியவற்றை முழு வதுமாக சீரழித்து விட்டது. காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசின் யோசனைதான் ஜிஎஸ்டி. இது ‘ஒரே வரி, குறைந்தபட்ச வரி’ எனவும், நிலையான மற்றும் எளி மையான வரியாகவும் இருக்க வேண் டுமென திட்டமிடப்பட்டது. ஆனால், மத்திய பாஜக கூட்டணி அரசு கொண்டுள்ள ஜிஎஸ்டி முற்றிலும் வேறுபாடுமிக்கது. இதில் 4 பிரிவுகளாக வரி பிரிக்கப்பட்டு, அதிகபட்ச வரியாக 28 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதைப் புரிந்து கொள்ள குழப்பமான தாகவும் சிக்கலாகவும் உள்ளது.
இந்த வரியை சிறு, குறு வணிகர்கள் செலுத்த முடியாது. பெரிய நிறுவனங் கள் ஒரு சில கணக்காளர்கள் மூலம் எளிதாக சரிகட்டி விட முடியும். ஏன் இந்த 4 விதமான வரி தெரியுமா? அர சுக்குப் பிடித்தவர்களுக்காக ஜிஎஸ்டி எளிதாக மாற்றப்படுகிறது, பிடிக்கா தவர்களுக்கு ஜிஎஸ்டி எதுவும் செய் யாது. ஜிஎஸ்டி வரி முழுக்க முழுக்க தோல்வி அடைந்த ஒன்று. இது ஏழைகள் மீதான தாக்குதல், சிறு, குறு வணிகங்கள் மீதான 2 ஆவது பெரிய தாக்குதல். அந்த தாக்குதலை நாம் உணர வேண்டும். அதை எதிர்த்து அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண் டும்.
குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச தனியார் துறை என்ற சிந்தனையில் மோடி அரசு உள்ளது. அரசு அலுவல கங்களில் நிரந்தர ஊழியர்கள் இல் லாத நிலையை உருவாக்குவதே அரசின் எண்ணம். தனது நண்பர்களின் முன்னேற்றத்துக்காக இளைஞர்களின் எதிர்காலத்தை அவர் (மோடி) நாச மாக்குகிறார் என்று பதிவிட்டுள்
ளார்.
No comments:
Post a Comment