‘பொருளாதாரத்தை புதுப்பிக்க- தயங்காமல் கடன் வாங்குங்கள்!’:  ப.சிதம்பரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 7, 2020

‘பொருளாதாரத்தை புதுப்பிக்க- தயங்காமல் கடன் வாங்குங்கள்!’:  ப.சிதம்பரம்


புதுடில்லி, செப்.7 முன்னாள் மத்திய நிதி அமைச்சரான காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் நேற்று (6.9.2020) தனது டிவிட்டர் பதிவில், ‘நுகர்வு தேவையை அதிகரிக்கவும் பொருளா தாரத்தை புதுப்பிக்கவும் சில நடவடிக்கைகளை உடனடியாக அரசு மேற்கொள்ளவேண்டும். 50 சதவீத ஏழை குடும்பங்களுக்கு குறிப்பிட்ட தொகை ரொக்கமாக வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கு உணவு தானியங்களை வழங்க வேண்டும். உள்கட்டமைப்புக்கான செலவி னங்களை அதிகரிக்க வேண்டும். ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்கவும், மாநிலங் களுக்கு கடன் வழங்கவும் வங்கிகளை மறுமூல தனமாக்குங்கள். இதற்கெல்லாம் பணம் தேவைப் படும். அதற்கு உலக வங்கியிடமி ருந்து கடன் வாங்குங் கள். தயங்கவேண்டாம்,’ என்றார்.


No comments:

Post a Comment