வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு 2ஆவது நாளாக ரயில் மறியல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 25, 2020

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு 2ஆவது நாளாக ரயில் மறியல்

அமிர்தசரஸ், செப். 25- வேளாண் மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் நடத்தி வரும் ரயில் மறியல் போராட்டம் 2ஆவது நாளாக நீடிக்கிறது.


மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ள வேளாண் மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. வேளாண் மசோதாக்களுக்கு எதிராக செப்டம்பர் 24ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்போவ தாக விவசாய சங்கம் (கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி) அறிவித்திருந்தது. அதன்படி நேற்று ரயில் மறியல் போராட் டம் தொடங்கியது. அமிர்தசரஸ் உள்ளிட்ட பல்வேறு பகு திகளில் விவசாயிகள் தண்டவாளங்களில் அமர்ந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இரண்டாவது நாளாக போராட்டம் நீடிப்பதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


No comments:

Post a Comment