இந்தியாவில் கரோனா பாதிப்பு 58.18 லட்சமாக உயர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 25, 2020

இந்தியாவில் கரோனா பாதிப்பு 58.18 லட்சமாக உயர்வு

புதுடில்லி, செப். 25- இந்தியாவில் கரோனா வால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 58 லட்சத்தை கடந்துள்ள நிலையில், குணமடைந்தவர்களின் எண் ணிக்கை 47.56 லட்சமாக உயர்ந்துள்ளது.


இந்தியாவில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பரிசோதனை கள் தொடர்ந்து அதிகரிக்கப்படும் நிலையில், பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. அதேசமயம் குணம டைந்தவர்களின் எண்ணிக்கை கணிச மாக உயர்ந்து வருவது ஆறுதல் அளிப் பதாக உள்ளது.


இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58 லட்சத்தை கடந்துள்ளது. மொத்த பாதிப்பு 58,18,571 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 86,052 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 1,141 பேர் மரணம் அடைந்துள் ளனர். இதன்மூலம் கரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 92,290 ஆக உயர்ந்துள்ளது.


கரோனா பாதிப்பில் இருந்து குண மடைந்தவர்களின் எண்ணிக்கை 47,56,165 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 81177 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 9,70,116 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.  உயிரி ழப்பு 1.59 சதவீதமாகவும், குணமடைந் தோர் விகிதம் 81.74 சதவீதமாகவும் உள்ளது.


No comments:

Post a Comment