கலை, அறிவியல் கல்லூரிகளில் 20விழுக்காடு இடங்கள் அதிகரிக்க அனுமதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 12, 2020

கலை, அறிவியல் கல்லூரிகளில் 20விழுக்காடு இடங்கள் அதிகரிக்க அனுமதி

சென்னை, செப். 12- கலை, அறிவியல் கல்லூரிகளில் மாண வர் சேர்க்கை அதிகரித்துள்ள தால் 20 சதவீதம் இடங்களை அதிகரிக்க தமிழக அரசு அனு மதி அளித்துள்ளது. கரோனா தொற்றால் இந்தாண்டு கலை, அறிவியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை இணை யம் மூலம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. அதன் படி, ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து மாணவர்கள் விண் ணப்பித்து வருகின்றனர். இந் நிலையில் கலை, அறிவியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.


இதனைத் தொடர்ந்து கலை அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீத இடங்களை அதி கரிக்க தமிழக கல்லூரி கல்வி இயக்குநர் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதன்படி கலை பிரிவுகளில் 20 சதவீத இடத்தையும், அறிவியல் பிரிவுகளில் ஆய்வக வச திக்கு ஏற்ப 20 சதவீத இடங் களை அதிகரிக்க அனுமதி அளித்து தமிழக அரசு அர சாணை வெளியிட்டுள்ளது. இந்த இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி பெற வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment