தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களுக்கு இணைய வழியில் செமஸ்டர் தேர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 12, 2020

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களுக்கு இணைய வழியில் செமஸ்டர் தேர்வு

கோவை, செப். 12- கோவை தமிழ்நாடு வேளாண் பல் கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ் டர் தேர்வு இணைய முறை யில் நடக்கிறது.


இத்தேர்வினை மாணவர் கள் வீட்டில் இருந்து எழுதி வருகின்றனர். இதுகுறித்து பல்கலைக்கழத்தின் தேர்வாணையர் சூரியநாத சுந்தரம் கூறியதாவது:


தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கட்டுப் பாட்டில் மாநிலம் முழுவதும் 14 உறுப்பு கல்லூரிகளும், 29 இணைப்பு கல்லூரிகளும், வேளாண் சார்ந்த பட்டப் படிப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில், இறுதி யாண்டு மாணவர்கள் 2,365 பேர் படித்து வருகின்றனர். இவர்களுக்கு இறுதி பருவத் திற்கான பாடங்கள் அனைத்தும் ஆசிரியர்கள் மூலம் இணைய வழியில் நடத்தப்பட்டது.


தற்போது மாணவர்க ளுக்கு இணைய முறையில் தேர்வுகள் நடத்தப்பட்டு வரு கிறது. இத்தேர்வு வரும் 14ஆம் தேதியுடன் முடிகிறது. தற்போது நிலவி வரும் சூழ் நிலை மற்றும் மாணவர்களின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு இணைய தேர்வுகள் மதிப்பீடு செய்யப்பட்டு முடி வுகள் விரைவில் அறிவிக்கப் படும். இவ்வாறு அவர் கூறி னார்.


தமிழ்நாடு வேளாண் பல் கலைக்கழகம் கடந்த 1971ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. 49 வருடங்களில் இறுதியாண்டு மாணவர்களுக்கு இணைய வழியில் தேர்வு நடப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment