தஞ்சாவூர், செப். 8 தஞ்சாவூர் சோழாஸ் ரோட்டரி சங்கத் தின் சார்பில் பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழ கம்) ஆச்சாம்பட்டி பண்ணை யில் 25,000 சதுர அடி அள வில் 6.9.2020 அன்று பன் னாட்டு ரோட்டரி மாவட்ட வழிகாட்டுதலின் படி குறுங் காடுகள் திட்டம் செயல்படுத் தப்பட்டது. இதில் பயன் தரும், பலன் தரும் சுமார் 500 மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந்நிகழ்வில் மாவட்ட ஆளுநர் ரோட்டேரியன் ஆர்.பாலாஜிபாபு, சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மரங்கன்றுகளை நட்டார். சோழாஸ் ரோட்டரி சங்கத் தின் தலைவர் ரோட்டேரியன் .முனைவர் தி.கிருஷ்ணகுமார் தலைமையில் மாவட்ட உதவி ஆளுநர் எஸ்.இளவரசு, மேனாள் மாவட்ட உதவி ஆளு நர்கள் சாமி சம்பத்குமார், குப்பு.வீர மணி, குறுங்காடுகள் திட்ட மாவட்ட சேர்மன் வி.ஜெ.பெலிக்ஸ்சுந்தர், மென்டார் ஏ.சந்தனசாமி மேனாள் தலைவர் மிச்சேல் தாஸ், சங்க செயல்திட்ட சேர்மேன் டி.நாக ராஜன், செயலர் டி.ஆனந்த ராஜ், பொருளாளர் துணைவேந் தன் மற்றும் அனைத்து சோழாஸ் ரோட்டரி சங்க உறுப்பினர் கள் கலந்துகொண்டு மரக் கன்று களைநட்டனர்.
பெரியார் மணியம்மை பல்கலைக்கழக விவசாய அலு வலர் க.பாண்டியன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந் தார். இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்த அனுமதி வழங் கிய பல்கலைக்கழக ஆட்சி மன்ற உறுப்பினர் வீ.அன்பு ராஜ் அவர்களுக்கு தஞ்சாவூர் ரோட்டரி சங்கத்தின் சார் பாக நன்றி தெரிவித்தனர்.
No comments:
Post a Comment