சென்னை, செப்.13 தமிழகத்தில் 2016இல் இயற்றப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தில், அரசின் திட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் அதன் மாநில பொது செயலாளர் நம்புராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மேலும் அவர் தாக்கல் செய்த மனுவில், இந்த சட்டத்தின் வழி முறைகளை முறையாக அமல்படுத்தாததால், 2019 பிப்ரவரியில் தமிழக ஊரக வர்ச்சித்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை ஆகியவற்றிற்கு மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர்.ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றரை ஆண்டுக்கும் முன்பாக அளித்த இந்த மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை மனுவை, 6 வாரத்தில் சட்டத்திற்குப்பட்டு பரிசீலித்து உரிய முடிவெடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
No comments:
Post a Comment