கோவிலில் உறங்கிய பூசாரிகள் மூவர் நள்ளிரவில் கொலை - உண்டியல் பணம் கொள்ளை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 13, 2020

கோவிலில் உறங்கிய பூசாரிகள் மூவர் நள்ளிரவில் கொலை - உண்டியல் பணம் கொள்ளை

கடவுள் சக்தி எங்கே?



மண்டியா,செப்.13, கருநாடக மாநிலம் மண்டியா நகரை ஒட்டியுள்ளது, குட் டலு கிராமம். இங்கு  அர்க் கேஸ்வரர் கோவில் அமைந் துள்ளது. இந்த கோவிலில் அதே பகுதியை சேர்ந்த கணேஷ், பிரகாஷ், ஆனந்த் ஆகியோர் பூசாரிகளாக வேலை பார்த்து வந்தனர். அவர்கள் தினமும் கோவிலில் பூஜை மேற்கொண்டு வந் தனர். மேலும் இரவில் 3 பேரும் கோவிலுக்குள் படுத்து தூங்குவதை வழக்க மாக வைத்திருந்தனர்.


இந்த நிலையில் பணிகளை 10.9.2020 அன்று இரவும் கோவிலில் பணிகளை முடித்து விட்டு 3 பூசாரிகளும் கோவிலில் படுத்து தூங்கினர். அப்போது நள்ளிரவில் சில நபர்கள் கோவிலுக்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். இதைக் கண்ட பூசாரிகள் மூவரும் தடுத்துள்ளனர். இதனால் ஆத்திர மடைந்த அந்த நபர்கள், அவர்களை பயங்கர ஆயுதங் களால் சரமாரியாக தாக் கினர். தாக்கப்பட்ட மூவ ரும் கோயிலுக்குள்ளேயே உயிரிழந்தனர்.


கோவிலின் உள்ளே இருந்த 3 உண்டியல்களையும் பெயர்த்து எடுத்து கோவி லுக்கு வெளியே கொண்டு சென்று அதன் பூட்டுகளை உடைத்த அந்த நபர்கள் அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து விட்டு, உண்டியல்களை அங்கேயே போட்டு விட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.


11.9.2020 அன்று காலை வழக்கம் போல் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவில் கதவுகள் உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் கோவிலுக்குள் சென்று பார்த்தனர். அங்கு பூசாரிகள் மூவரும் கொலை செய்யப்பட்டு ரத்த வெள் ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந் தனர்.


மண்டியா கிழக்கு காவல் துறையினர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பலியான 3 பூசாரிகளின் குடும்பத்தினருக்கும் கருநாடக அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் முதல்-அமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.


No comments:

Post a Comment