பத்திரிகையாளர் மறைந்த சுதாங்கன் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 13, 2020

பத்திரிகையாளர் மறைந்த சுதாங்கன் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்!


முதுபெரும் பத்திரிகையாளரும், சிறந்த பண்பாளருமான நண்பர் சுதாங்கன் (வயது 63) அவர்கள்  12.9.2020 அன்று மறைவுற்றார்  என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனையும், துயரமும் அடைகிறோம்.


நண்பர் சுதாங்கன் அவர்களுடைய கொள்கையில் நமக்கு மாறுபட்ட கருத்து உண்டு என்றாலும், அவர்தம் நட்பு நம்மிடையே என்றும் தொடர்பு அறுபடாத ஒன்றாக இருந்தது. அவரது சிந்தனை பல நேரங்களில் தனித்தன்மையானது. பல்வகைத் திறமையாளர்.


ஒரு மூத்த, முதிர்ந்த பத்திரிகையாளரை, ஊடகவாதியை இழந்துள்ளது தமிழ்நாட்டு பத்திரிகை - ஊடக உலகம்.


அவரது மறைவால் மிகப்பெரும் இழப்புக்கு ஆளாகியுள்ள அவரது குடும்பத்தாருக்கும், பத்திரிகை உலகத்தவர்களுக்கும் நமது இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்


சென்னை 
12.9.2020


No comments:

Post a Comment