காணொலியில் தமிழர் தலைவர் பங்கேற்பு
சென்னை, செப். 8- தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 25ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு வெள்ளிவிழா மாநாடு இணையம் வழியாக 6.9.2020 அன்று இரு அமர்வுகளாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலை வர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது.
காலையில் தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் குணங்குடி ஆர்.எம்.அனிபா தலைமையில் நடைபெற்ற அறிவரங் கத்தில் சட்ட வல்லுநர்கள், கல்வியாளர் கள். மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.
தலைவர்கள் பங்கேற்பு
பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்ற மாலை அமர் வில், திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டா லின், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக் கீம், காங்கிரஸ் மூத்த தலைவர் கே.வி. தங்கபாலு, சிபிஅய் தலைவர் இரா.நல்லக்கண்ணு. சி.பி.எம். தலைவர் டி.கே.ரங்கராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன், முஸ்லிம் லீக் முதன்மை துணைத் தலைவர் எம்.அப்துல் ரகுமான் உள்பட பலர் பங்கேற்று உரையாற்றினர்.
தமுமுக வெள்ளிவிழா மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
No comments:
Post a Comment